02.10.1943-ல் ஒரு சிறு கிராமத்தில் பிறந்தேன். நான் ஏழாம் வகுப்பு வரை உள்ளூர் பள்ளியில் படித்தேன். என்னுடைய படிக்கும் பருவத்திலேயே காந்தியின் புகைப்படங்களைப் பார்த்து என் மனதில் தேசத் தந்தை காந்தியைப் போல் நாம் ஏன் வாழக்கூடாது என்று என் உள் மனம் நினைத்தது. காலத்தின் போக்கில் அதை என்னால் செயல்படுத்த முடியவில்லை. பதினைந்து ஆண்டுகளாக நான் ஒரு கல்லூரியில் கேண்டீன் நடத்திக் கொண்டிருக்கும் போது, மாணவர்கள் மத்தியில் நான் மிகவும் கவரப்பட்டு பல மாணவர்களை நேர்மையும் சத்தியமும் அஹிம்சா வழியையும் கடைப்பிடிக்க வேண்டுமென்று வலியுறுத்தினேன். என் வார்த்தைக்கு நல்ல பலன் கிடைத்தது.
2002ம் ஆண்டு முதல் மக்கள் மத்தியிலும் நான் ஏன் காந்தியாகத் தோன்றி காந்தியின் வழியைக் கடைப்பிடிப்பதற்காக பாடுபட்டு காந்திய வழியை மக்களிடத்திலே பரப்ப வேண்டுமெண்ற எண்ணம் என் மனதில் வேறூன்றி விட்டது. அதன் காரணமாக இந்த பத்து ஆண்டுகளாக காந்தியைப் போல் காந்திய வழியில் 110 கோடி மக்களில் காந்தியின் நினைவாக ஒருவராவது இந்திய நாட்டில் ஏன் வாழ முடியாது என்று நினைத்தேன். அதன் பலனாக இன்று நான் காந்தியாக சத்தியம், அன்பு, அஹிம்சை ஆகிய இம்மூன்று காந்தியின் வழிகளை கடைபிடித்து தமிழகம் முழுவதும் பயணம் செய்து காந்திய வழியை மக்களிடத்திலே பரப்பிக்கொண்டு வருகிறேன்.
எனக்கு முதன் முதலில் என்னை காந்தியாக சந்தித்த எனது பாசமிகு மனித நேயத்தின் மாமனிதர், இலக்கியச் சுடர், நடிகர்.R.சிவக்குமார் அவர்கள் என் காந்தியின் தொண்டும் பயணமும் தொடர்ந்து வழிநடத்திக் கொண்டிருக்கும் எனது ஆசான் சிவக்குமாரை என் நெஞ்சார வாழ்த்துகிறேன் .
எனது காந்திய வழிப் பயணத்திற்கு பல விதமான உதவிகள் பல புரிந்து என் குடும்பத்தின் ஒளி விளக்காக என் வாழ்வுக்கு ஒளி கொடுத்து என் காந்திய வாழ்விற்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து என்னை வழி நடத்திச் செல்லும் எனது அன்பிற்குரிய பாசமிகு அன்புச் சகோதரர் ராம்ராஜ் காட்டன் இயக்குனர் உயர்திருவாளர் K.R.நாகராஜ் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை சமர்ப்பிக்கிறேன்.
என்னுடைய இந்த நல்வழிப் பயணத்திற்க்கு பல நல்ல உள்ளங்கள், காந்தியவாதிகள் ,ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்.திரு.சுடலைக்கண்ணன் அவர்கள், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.R.சகாயம் அவர்கள், குமாரபளையம் J.K.K.முனிராஜா ஐயா அவர்களைப் போன்ற நல்ல உள்ளங்கள், தமிழகத்தின் தலைசிறந்த தன்னலம் கருதாத, ஏழையின் சிரிப்பிலே இறைவனாக வாழும் முதலமைச்சர் முனைவர் கலைஞர் அவர்களிடத்திலும் நான் ஆசி பெற்று இந்த காந்திய வழியை மக்களிடத்திலே பரப்பிக்கொண்டு வாழ்ந்து வருகிறேன். நான் தற்போது ஈரோடு மாவட்டதில் அரசால் வழங்கப்பட்ட இடத்தில் காந்தி குடில் அமைக்க முயன்று வருகிறேன்.
இந்த காந்தி குடில் கட்டிடம் கட்டுவதற்கு எனக்கு பொருளாதார உதவி தேவைப்படுவதால் நல்ல உள்ளம் படைத்தோர் எனக்கு பொருளாதார உதவி செய்து காந்தி குடில் உருவாக உறுதுணை புரியுமாறு இந்த சண்முக காந்தி தங்களிடம் சிரம் தாழ்ந்த உதவியை நாடுகிறேன்.
நான் பல பள்ளிக் குழந்தைகளுக்கு என்னால் முடிந்த அளவு பல உதவிகளை செய்து கொண்டு வருகிறேன். மேலும் அந்த நல்ல தொண்டு விரிவடைவதற்கு சத்தியத்தின் நீதியாக நான் செயல்பட நல்ல உள்ளம் படைத்தோர் உதவி புரிந்து என் காந்திய வழிப் பயணம் தொடர்ந்து செயல்படுவதற்கு ஆதரவு கொடுத்து உதவி புரியுங்கள்.
அன்பளிப்பு வழங்கும் நல் உள்ளங்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு காசோலையாகவோ அல்லது வங்கி வரைவோலை (DD) யாகவோ அனுப்பிக் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தற்போதய வசிப்பிடம் :
சண்முகம் (சண்முக காந்தி),
காவல் நிலையம் அருகில்,
சத்திரம் வீடு,
சத்தி மெயின் ரோடு,
பங்களாப் புதூர்.
போன் - கைப்பேசி: 91-9150310279
போன் - வீடு: 04285-319940
போன் - வீடு: 04285-319940
இளைஞர் சமுதயத்தை ஒழுக்கரீதியாகவும் காந்திய வழித்தோன்றலாகவும் நடைமுறைக்கு கொண்டு வருவது எனது லட்சியம்.அதற்காக என் மூச்சுள்ளவரை பாடுபட்டு பிரச்சாரம் செய்து மக்களையும் காந்திய வழிக்கு கொண்டு வருவேன் .
பணம் படைதோரையெல்லாம் மனம் படைத்தவர்களாகவும் உருவாக்க வேண்டும். அதற்காக பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்க்கொள்வேன்.
இங்கனம்
நன்றியுடன்
சண்முக காந்தி